Saturday, 7 August 2010

Paripadal - 1 (Thirumaal)பரிபாடல் பாடல் -1இது கடவுள் வாழ்த்து.

எழுதிய புலவர் பெயர் தெரியவில்லை.திருமால்


ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

(இது தரவு )

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

( இது கொச்சகம் )

அமர் வென்ற கணை

இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20


றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25


போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

(இவை நான்கும் அராகம்)

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

பொருவேம்என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:

(இது ஆசிரியம்)


அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35

(இது பேரெண்)அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

(இது ஆசிரியம்)விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், வனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50நிலனும், நீடிய இமயமும், நீ.


(இவை ஆறும் பேரெண்)


அதனால்,


( இது தனிச் சொல் )


இன்னோர் அனையை; இனையையால்என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55


மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!

(இது சுரிதகம்)


நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,

( இவை சிற்றெண்னும் பேரெண்னும் இடைஎண்ணும்)


ஆங்கு,

( இது தனிச் சொல் )


காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

(இது சுரிதகம்)
*******************************Meaningஎவ்வுயிருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இயல்பை உடைய , சினத் தீயை உமிழுகின்ற படம் விரிந்த ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் உன் தலை மீது நிழலாக இருக்கிறான் .
திருமகள் வீற்றிருக்கும் மலர் மார்பினை உடையவன் நீ.குற்றமில்லா வெண்மையான சங்கினைப் போன்ற நிறத்தையும், மிக உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் கட்டப்பட்ட யானைக் கொடியினை உடையவனும், கூர்மையாகவும் , வளைந்தும் இருக்கும் கலப்பையினை உடையவனும், ஒற்றைக் குழையை அணிநதவனுமாகிய பலதேவனாகவும் நீ விளங்குகின்றாய்.

கருடச் சேவல் கொடியைக் கொண்டவனே! தாமரை போன்ற அழகிய கண்களை உடையவன் நீ .காயாம் பூவினது நிறத்தை உடையது உன் மேனி.
அத்திரு மேனியின் கண், திருமகள் விரும்பி உறையும் மார்பிடத்தே நினக்கே உரியது என்று தெரியும் வண்ணம் கௌஸ்துப மாலையை உடையவன் நீ.கரிய மலையைச் சூழ்ந்து தீப்பிழம்பு சுற்றினாற்போல, பொன்னிற ஆடையை உடுத்தி உளாய்.நாவன்மை உடைய அந்தணர் உணர்தற்குரிய அரு மறைப் பொருளே !
நினது அருளாலே உனது வலப்பக்கம் நிலை நிறுத்தப்பட்ட உயிர்கள், உன்னுடைய அருள் தழுவுதலாலே நின்னை வழிபடும் தன்மையை அவர்கள் எவ்வாறு கூற வல்லவர்கள் ஆவார்கள்? –(ஆக மாட்டார்கள்).

தம் அறியாமையினாலே உன்னோடு போர் செய்வோம் என்று வந்த அவுணர்களுடைய வலிமை கெடும் வண்ணம், போரின் கண் வென்ற குற்றமற்ற தலைமை உடைய அண்ணலே !

காமன், சாமன் என்னும் இருவருடைய தந்தையே !விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவனே !உன் வரவினை, (அவதாரத்தை அல்லது வரலாற்றை ) விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்பது, மயக்கம் தீர்ந்த தேர்ச்சி பெற்ற முனிவருக்கும் அரிதானது!
அப்படிப்பட்ட இயல்பினை உடையவனே !
முனிவர்களுக்கே அப்படி என்றால், நீ எப்படிபட்டவன் என்று உரைப்பது எங்களுக்கு மட்டும் எப்படி எளிதாகும் ?

அழகிய தாமரை மலரின் கண் வீற்றிருக்கும் திருமகளை மார்பினிலே தாங்கியுள்ளவனே! அறிவதற்கு இயலாதது உன் வரலாறு என்று நாங்கள் நன்றாக அறிந்திருந்தாலும் , உன் மேல் எங்களுக்குள்ள ஆர்வமும் அன்பும் பெருமையுடையது என்பதால், நாங்கள் கூறுவதை சிறுமை உடையது என்று நீ கருதி எங்களை வெறுத்து விடாமல் அருள வேண்டும்.

வெற்றி மிகுந்த பெரும் புகழினை உடைய அந்தணர்களாலே காக்கப்படும் அறமும், நின் அன்பர்களுக்கு நீ அருள்கின்ற திருவருளும் நீயே;

நன்னெறியில் செல்லும் திறனில்லாதவரை, அந்நெறியில் செல்லுமாறு திருத்தும் தீதறு சிறப்புடை மறமும் நீயே; அவ்வாறு திருத்துவதால், உனக்குப் பகையாக இருப்பவரை வருத்தும் துன்பமும் நீயே;அழகும், எழுச்சியும் உடைய வானத்தின் கண் அணிபெற விளங்கும் ஒளிதரும் நிலவும் நீ;


சுடுகின்ற சுடரை உடைய சூரியனும் நீயே.


ஐந்து தலைகளைத் தனக்குத் தோற்றுவித்துக் கொண்ட கொல்லும் தொழிலை உடையவனும், கடத்தற்கரிய திறமையையும், வலிமையையும் உடைய ஒப்பற்ற சிவ பெருமானும் நீயே;


அவனால் செய்யப்படுகின்ற மடங்கலாகிய ஒடுக்கும் தொழிலும் நீயே;


நன்மை தருகின்ற, குற்றமற்ற மெய் உணர்வினை அளிக்கின்ற வேதமும் நீ;


பூவின் மேல் இருக்கும் பிரம்மனும் நீ;


அவன் செய்யும் நாறுதல் என்னும் தோற்றம் என்னும் படைப்புத் தொழிலும் நீயே;வானின் கண் உயரும் மேகமும் நீ;

மாகம் என்னும் வானமும் நீ;

இந்தப் பூமியும் நீ;

நீண்டு நெடிதுயர்ந்த இமயமும் நீயே.
நீ இவரைப் போன்றவன், இவருக்கு இணையானவன் என்று உவமை காட்ட யாருமே இங்கு காணப்படாமையால், பொன்னின் அழகினைக் கொண்ட சக்கரப் படையினை எல்லா உலகையும் ஆள்வதற்கு அடையாளமாக நின் வலப் பக்கத்தே ஏந்தி, நிலை பெற்ற உயிர்களுக்குத் தலைவனுமாக நீ இருப்பதால், உனக்கு ஒப்புமை நீயேதான்!

உன் புகழ்தான் உனக்கு ஒப்புமையானது.
புள் என்னும் கருடப்பறவையைக் கொடியில் உடையவன் நீ.
முறுக்கிய சங்கினை உடையவன் நீ.
இகழ்வாராகிய பகைவரை வென்று, கொன்று என்று தக்கவாறு செயல் புரியும் மாறுபாட்டினை உடைய சக்கரப்படையை உடையவன் நீ.
கழுவப்பட்ட நீல மணி பரப்பும் நிறத்தை உடைய திருமேனியை உடையவன் நீ.
அளவற்ற புகழ் உடையவன் நீ.
அழகிய மார்பினை உடையவன் நீ.
என இவ்வாறு கூறி, நாங்கள் விரும்பும் அல்லது எங்களை விரும்பும் சுற்றத்தாரோடு ஒன்று கூடி, உன் திருவடியில் இணைந்து, என்றும் இந்தத் திருவடி விளங்குவதாக, பொலிக இவ்வடி என்று இன்பமுறும் நெஞ்சத்தோடு கூறுகிறோம்.


வாய்மொழிப் புலவனே!


வாய்மொழியாகச் சொல்லப்படும் வேதத்தை அருளிச் செய்த புலவனே!

உன் திருவடி நிழலைத் தொழுகிறோம் .


10 comments:

Shantosh S said...

I am not very good when it comes to classical Tamil literature. The song from Paripaadal is very refreshing. But I have a question - but not exactly mine - whether the Mayon or Mal of Tamil Sangam is same as Narayana/Vishnu? There is a strong opinion, Vishnu and Thirumal are different Gods and some where in history they were joined. The same applies to Skanda and Murugan. Infact the Paripaadal song says Mal is white in color like the sangu, but is he not supposed to be blue or black if going by the recent trends..

Shantosh S said...

There are lot of questions being raised which I believe is due to selective interpretation. Here are some links which have daring insights and question the very basic beliefs ...

http://thamilarsamayam.blogspot.in/2011/06/racism-through-advaita-philosophy.html#more

http://thamilarsamayam.blogspot.in/2011/06/origin-of-hindu-religion-six-fold.html#more

jayasree said...

பரிபாடல் தமிழ் அருமையாக இருக்கிறது. அதில் ஒரு ஓசை நயம் இருக்கிறது. அந்த ஓசை நயம் எதுகை மோனையால் ஏற்பட்டதல்ல. தமிழ்ச் சொற்களே ஒரு ஓசை நயத்துடன் இருக்கின்றன. அவற்றின் வெளிப்பாட்டைப் பரிபாடலிலும், புற நானூற்றுப்பாடல்கள் பலவற்றிலும் காணலாம். அந்தத் தமிழ் இன்று இல்லை.

அந்த ஓசை நயத்தின் காரணமாகத்தான் தமிழை மதுர மொழி என்று அழைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி ‘தமிழன் திராவிடனா’ தொடரில் படிக்கலாம். மதுரமாக இருந்ததன் காரணாமாக, மதுரை என்ற பெயரில் நகரமும், அதில் குடி கொண்ட ஈஸ்வரனை மதுரேசன் என்றும் அழைத்திருக்கிரார்கள்.

சங்கப் பாடல்களில் பரிபாடல்கள் பழமையானவை. முதல் சங்கத்தில் பரிபாடல்கள் அரங்கேறின. இசையமைத்து இவை பாடப்பட்டன. இன்று அந்த இசையின் பெயர் மட்டும் இருக்கிறது. அது என்ன இசை என்பது மறைந்து விட்டது. ஒவ்வொரு பரிபாடலுடனும் அது பாடப்பட்ட பண் (ராகம்) சொல்லப்படவே, பாடலின் சொற்கட்டும் கவனமாகப் பின்னப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இனி நீங்கள் எழுப்பியுள்ள வினாக்களுக்கு வருகிறேன். மாயோன், மால், நாராயணன், விஷ்ணு என்பவை எல்லாம் திருமால் என்னும் ஒரே தெய்வத்தையே குறிப்பன. இவை எல்லாமே திருமாலின் குணங்களையோ, செயல்பாட்டயோ குறிப்பன. திருமாலுக்கு 1000 பெயர்கள் உண்டு.(சஹஸ்ர நாமம்) அந்த வகையில் இவை இருக்கின்றன. இவற்றுள் மால் தவிர மீதிப் பெயர்கள் சமஸ்க்ருதம் கலந்தவையே. மால் என்பதும் ‘மாம்’ என்னும் சமஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து வந்தது என்பர்.

பரிபாடல் 3 ஆம் பாடல் ”மாஅயோயே, மாஅயோயே” என்றுதான் ஆரம்பிக்கின்றன. இதற்குக் கருநிறம் உடையவன் என்று பொருள். மா+ அயம் என்பது மாயம், மாயன், மாயோன் எனத்திரிந்தது. அயம் என்றால் இரும்பு. இரும்பு கரு நிறத்துடன் கூடியது. ஆனால் ஏன் இரும்பின் பெயரில் அழைக்கவேண்டும்? காரணம், மா என்பதில் இருக்கிறது. மா என்றால் லக்ஷ்மி. இரும்பை இழுக்கும் காந்தம் போல லக்ஷ்மி இழுக்கிறாள். அதனால் அவன் மாஅயோன். ைப்படி ஒரு அர்த்தத்துடன் இது என்ன பெயர் என்று கேட்கலாம். இதில்தான் ராமாயணமே அடங்கி இருக்கிறது. சீதையைத் தேடிக் கொண்டு ராமன் போனதற்குக் காரணம், அவள் மா, அவன் அயம். அவளைப் பின் தொடர்ந்து அவன் செல்வான்.

மால் என்றால் ’மயக்கம்’ என்று பொருள். தன்னிடம் மக்களை மயங்கச் செய்வதால் அவன் மால். அவனிடம் ஒரு கவர்ச்சி, வசீகரம் இருக்கவே மக்களை ஈர்க்கிறான். அவனைப் போலவே முருகனும் வசீகரிப்பவன். அதனால் அவன் மால் மருகன். மருகன் என்றால் என்றால் மருமகன் (சகோதரி மகன்) என்றும் பொருள். மரபில் வந்தவன் என்றும் பொருள்.

அந்தத் திருமாலே நாராயணன், விஷ்ணுவும் ஆவார். ’எவனில் எல்லாமும் அடங்கி இருக்கிறதோ, எவற்றில் அவன் இருக்கிறானோ’ என்பது நாராயணன் என்பதன் பொருள்.

எங்கும் பரந்து நிறைந்திருப்பன் என்பது விஷ்ணு என்பதன் பொருள். இந்தப் பெயர்களெல்லாம் திடீரென்று ஒட்டிக் கொண்டவை அல்ல. தத்துவங்களும், அர்த்தமும் நிரம்பியவை. நன்கு முன்னேறிய ஒரு சமுதாயத்திதான் இந்த அளவு சொல்லாட்சிகள் உண்டாகி இருக்க முடியும்.

மால் என்றால் சங்கு போன்ர வெண்மை என்பது அர்த்தமல்ல. பரிபாடல் பொருள் விளக்கத்தை ஊன்றிப் படிக்கவும். சங்கு என்ற வர்ணனை கிருஷ்ணனது அண்ணன் பலராமனுக்குச் சொல்லப்பட்டுள்ளது.
நிறத்தை வைத்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால், கிருஷ்ணன் கருப்பு. விஷ்ணு என்னும் திருமாலும் மேகஸ்யாமளன். ஸ்யாமளம் என்றால் கருப்பு. மேகத்தின் கருப்பு அவனது நிறம். “ஊழி முதல்வனும் உருவம் போல் மெய் கருத்து” என்று ஆண்டாள் கரு மேகத்துடன் கண்ணனை ஒப்பிடுகிறாள்.

பலராமன் வெளுப்பு. சிவன் சிவப்பு. முருகன் இளஞ்சிவப்பு. இதைப் பற்றி தமிழன் திராவிடனாவில் ஒரு கட்டுரை இட்டுள்ளேன்.

jayasree said...

இனி முருகனுக்கு வருவோம். முருகன் தமிழ்ப் பெயர். அழகு, இளமை என்பது அதன் பொருள். ஸ்கந்தன் என்பது சமஸ்க்ருதச் சொல். அதன் தமிழாக்கம் கந்தன் என்பதாகும். ‘சிதற்ல்’ என்பது அதன் பொருள். சிவனது விந்து சிதறி அதில் தோன்றியவன் என்பதால் இந்தப் பெயர். முருகனுக்கும் பல பெயர்கள் உள்ளன. முருகனை விவரிக்கும் குணம், அல்லது செயல்பாட்டினால் அந்தப் பெயர்கள் எழுந்தன. மார்க்கண்டேய ரிஷி ஒரு முருக பக்தர். அவரைக் கண்ட மாத்திரத்தில் அவரிடம் முருகனைப் பற்றித்தான் கேட்பார்கள். அப்படி ஒரு முறை பாண்டவர்கள் கேட்ட பொழுது அவர் முருகன் கதையை் ஆதியோடந்தமாக விவரிப்பதை மஹாபாரதத்தில் காணலாம். அப்பொழுது அவர் முருகனுக்குள்ள பல பெயர்களையும் விவரிக்கிறார். அவற்றின் பொருளுடன் அவர் விவரிப்பதை கீழே கொடுத்துள்ளேன்.


From Mahabharatha, vana parva chapter 230:-

Agneya Son of Agni,

Skanda Cast-off,

Diptakirti Of blazing fame,

Anamaya Always hale,

Mayuraketu Peacock-bannered,

Dharmatman The virtuous-souled,

Bhutesa The lord of all creatures,

Mahishardana The slayer of Mahisha,

Kamajit The subjugator of desires,

Kamada The fulfiller of desires,

Kanta The handsome,

Satyavak The truthful in speech,

Bhuvaneswara The lord of the universe,

Sisu The child,

Sighra The quick,

Suchi The pure,

Chanda The fiery,

Diptavarna The bright-complexioned,

Subhanana Of beautiful face,

Amogha Incapable of being baffled,

Anagha The sinless,

Rudra The terrible,

Priya The favourite,

Chandranana Of face like the moon,

Dipta-sasti The wielder of the blazing lance,

Prasantatman Of tranquil soul,

Bhadrakrit The doer of good,

Kutamahana The chamber of even the wicked,

Shashthipriya True favourite of Shashthi,

Pavitra The holy,

Matrivatsala The reverencer of his mother,

Kanya-bhartri The protector of virgins,

Vibhakta Diffused over the universe,

Swaheya The son of Swaha,

Revatisuta The child of Revati,

Prabhu The Lord,

Neta The leader,

Visakha Reared up by Visakha,

Naigameya Sprang from the Veda,

Suduschara Difficult of propitiation,

Suvrata Of excellent vows,

Lalita The beautiful,

Valakridanaka-priya Fond of toys,

Khacharin The ranger of skies,

Brahmacharin The chaste,

Sura The brave,

Saravanodbhava Born in a forest of heath,

Viswamitra priya The favourite of Viswamitra,

Devasena-priya The lover of Devasena,

Vasudeva-priya The beloved of Vasudeva,

and Priya-krit The doer of agreeable things,

these are the divine names of Kartikeya.

jayasree said...

இனி தமிழில் வழங்கும் முருகன் பெயர்கள்:-
கந்தன் (சேர்க்கப்பட்டவன், சத்துருக்களை அழிப்பவன்)

முருகன்

வேள் (விரும்பப்படுபவன்)

சாமி

ஆறுமுகன்

குஹன் (காப்பவன், ரகசியமானவன், தன் சேனைகளைக் காப்பவன் -இந்தப் பெயர் சமஸ்க்ருதப் பெயர்)

குழகன் (அழகன்)

மாயோன்மருகன்

சேய் / சேயோன்(செந்நிறம் கொண்டவன்)

கார்த்திகேயன்

வரை பகையெறிந்தோன் (வரை- மலை, கிரௌஞ்ச மலை எறிந்தவன்)

செட்டி (வைசியனாகப் பிறந்தவன்)

அரன் மகன்

கங்கை மைந்தன்

ஆண்டலைக் கொடி உயர்த்தோன் (கோழிக் கொடி)

சரவணபவன் (சரவணப் பொய்கையில் பிறந்தவன்)

கடம்பன் (கடம்ப மாலை அணிந்தவன்)

தாரகற்செற்றோன் (தாரகாசுரனை அழித்தவன்)

ஆசான்

குறிஞ்சிவேந்தன்

வேலினுக்கிறை (வேல் படை கொண்டவன்)

விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன்)

சேந்தன் (திருச்செந்தூரை உடையவன் - சிந்து என்ற பெயர் செந்தூர் என்றானது. சிந்து என்றால் கடல் அல்லது கடல் போன்ற வெள்ளம் என்பது பொருள். தமிழனது சிந்து- தொடர்பு திருச்செந்தூரில்தான் இருக்கிறது)

காங்கேயன் (கங்கை புத்திரன்)

செவ்வேள்

சிலம்பன் (மலைகளை உடையவன்)

மஞ்ஞையூர்தி (மயில் வாகனம் உடையோன்)

சூர்ப் பகைவன்

வள்ளி மணவாளன்

தெய்வயானை காந்தன்

குமரன் (இளமை, அருவெறுப்புகளை அழிப்பவன்)

புலவன்.

jayasree said...

சந்தோஷ் அவர்களே,
நீங்கள் காட்டிய இணைப்புகளைப் படித்து நேரத்தை வீணாக்க விருபவில்லை. அந்த இணைப்புகளின் பெயரிலேயே அவற்றில் உள்ள விவரம் என்ன என்று தெரிகிறது. இதுவரை இரண்டு தெய்வத்தின் பெயர்களை மட்டுமே விவரித்தேனே, அதன் மூலமே, ஹிந்து மதத்தின் விரிவும், இந்த அளவு விவரங்கள் வளர ஆகும் கா வீச்சும் விளங்கும். ஹிந்து மதத்தின் தொன்மை 12,000 ஆண்டுகள் வரை செல்கிறது. அவ்வாறிருக்க இந்தக் குப்பைகளைத் திரும்பிப் பார்க்க எண்ணமே வரவில்லை.

எனினும் நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கு வந்தனம், நன்றி.

mudaliar said...

Dear Madam

I already posted for clarification on Avvaiyar.Now I wish to to inform that Lord was white initially .Only with alagalavisham splash lord body turned to black and Siva^s neck turned to blue after drinking the same.Well I am not an expert like you.

jayasree said...

Dear Mr Mudaliar,

I read your Avvaiyar comment, and will reply soon. Many comments in all the three blogs have been cleared for publishing but due to per-occupations and priority list, I have not yet responded to them. Today I am reading them all one by one and am writing my responses. Please bear with the delay.

On colour of Shiva, you would have read in தமிழன் திராவிடனா? blog that Shiva was described as red in colour in Mullaik kali! Halahala visham gave him the Neela- kandam. Can you be more specific on the idea for which you want me to respond?

mudaliar said...

Dear Madam

Thanks for the response.
I just happened to read your explanation of color for Balarama and Krishna.I stumbled upon a version that Lord Vishnu was also white and only after the splash with Halahala poison lord acquired Black color. Hence I refered to your good self for your comments.
Best wishes

Bipan Guleria said...

provide english version of these