Thursday, 17 December 2009

இருந்தையூர் திருமால்திருமால்


(இது செய்யுள் இயல்,
சூ. 121, பேராசிரியர் நச்சினார்க்கினியர், உரையில் கண்டெடுக்கப்பட்டது.)


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

(இது தரவு )

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை ... .. 10
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் வி¡¢ தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து ... . 15
திரி நரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரி வு இல்லா அந்தணர் ஈண்டி, .. .. 20
அறத்திற் திரியா பதி.

(இவை நான்கும் கொச்சகம் )


ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்,
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் . . . 25
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

(இது கொண்டுநிலை )

வண்டு பொரேரென எழ, 30
வண்டு பொரேரென எழும்;
கடிப் புகு வோரிக் கதவமிற் றோட்டி-
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
ஊர் களிற்றன்ன செம்மலோரும் . . . . 35

வாய் இருள் பனிச்சை வரிசிலைப் புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும் . .. . . 40

நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்-
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, ...45

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, ...50
விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியடு இரு முழவு ஆர்ப்ப,
அரிஉண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
பு¡¢வுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் வி¡¢யச் ...55

சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

(இவையும் கொச்சகம் )

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல். ....60

பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரிஅரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.

(இது முடுகியல் )

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, ...65

மகர மறி கடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் ...70

அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிபு இல் சீர்ச் .....75

செல் விடைப் பாகன் தி¡¢புரம் செற்றுழிக்
கல் உயர் வென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்

(இவையும் கொச்சகம் )

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த

கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,

நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. ...82


(என்பது ஆசிரியச்சுரிதகம் )


பொருளுரை

முகில் மலையின் கண் மழையை மிகுதியாகப் பொழிய ,
அந்நீர் நான் மாடக் கூடலில் உள்ள மக்கள்
விரும்பி எதிர் கொள்ளும்படி வருகின்ற துறையிடத்தே உள்ள
இருந்தையூர் என்னும் பதியில் எழுந்தருளியுள்ள செல்வ (திருமாலே )!
நின் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம் .


இருந்தையூரின் ஒரு பக்கத்தில் ,
வேங்கையும் , வெண் கடம்பும் , மகிழ மரமும் ,
அரும்புகள் மலர்ந்த நிலையில்
மற்றும் பல மரங்களும் ஒன்றாக வளர்ந்திருக்க ,
நீல நிறம் கொண்ட மலை உள்ளது .இருந்தையூரின் மற்றொரு பக்கம் , விண்ணென விரிந்த நீர் நிலைகள் உள்ளன .
அவற்றின் கண் உள்ள தாமரைப் பூக்களின் நடு நடுவே , வண்டுகள் தேன் பருக விரும்பி ஆர்பரித்துக் கொண்டிருக்கும் .
ஆங்கே , கயல் மீன்கள் விண் மீன்களைப் போல ஒளி வீசிக் கொண்டிருந்தன .இருந்தையூரின் மற்றொரு பக்கம் ,
கருப்பஞ்சாறு பிழியப்படும் ஒலியுடன் , கள்ளுண்டுஅதனால் அறிவிழந்து திர்பவர்களும் ,
அந்த சாறு பிழியப்படும் ஒலிக்கு
மாறு பட்டு ஒலிக்கும் வண்ணம் ,
ஏர் மங்கலப் பாட்டுப் பாடி வயலில் நாற்று
நட்டு வேலை செய்யும் ஆண்களும் , பெண்களும் இருக்கும் ,
திரு எனப்படும் திருமகளும் விரும்பத் தக்க வயல்கள் இருந்தன.இருந்தையூர் என்னும் அந்நகரத்தின் ஒரு புறம் , அற வழியில்
நின்று , வேதத்தை நன்குணர்ந்து , முற்றிய தவத்துடன் , மாறாப் புகழுடன் அந்தணர்கள் வாழ்தலானே, ஏனையோரும் தத்தமக்குரிய அற ஒழுக்கத்தினின்று பிறழாமல் வாழும் ஊராக இருந்தது .அங்கே மற்றொரு பக்கத்தில் , உண்ணக்க்கூடியவையும் , பூசக்கூடியவையும் , பூணக் கூடியவையும் , உடுக்ககூடியவையும் , மஞ்சனமாடக் கூடியவையும் ஆகிய பொருட்களையும் , மேலும் பொன் , மணி மற்றும் மலையில் கிடைத்த பொருட்கள் , கடலில் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் , பட்டாலும் , பருத்தியாலும் நெய்த துணிமணிகளை விற்கும் வணிகர்கள் வாழும், அழகாகப் புனையப் பட்ட தெருவும் இருந்தது .ஒரு புறம் , மென்புலம் என்னும் மருத நிலத்திலும் , மற்றும் ,வன்புலம் என்னும் குறிஞ்சி, முல்லை நிலத்திலும் தொழில் செய்யும் களமர் மற்றும் உழவர் வாழும் இடம் இருந்தது . இருந்தையூர் என்னும் அந்தப் பதியில், இம்மக்கள் அனைவரும் கூடி இன்பமாக வாழ்ந்து வந்தனர் .

கடிப்பு என்னும் அணியிட்டுத் தாழ வளர்த்திய காதிலே , கனங்குழை என்னும் அணிகலனை இடும் பொருட்டு , மகளிர் தம் வளை அணிந்த கையினைத் தூக்க , அந்த வளைகள் எழுப்பிய ஓசையினால் , அவர்கள் அணிந்துள்ள மலர் மாலைகளில் உள்ள வண்டுகள் பொறேர்என்னும் ஓசையுடனே எழும் . அப்படிப்பட்ட காதணிகளை அணிந்துள்ள , ஒளிரும் நெற்றியை உடைய மகளிரும் , அவர்களுடன் , ஊர்ந்து செல்லும் யானையைப் போன்ற அவர்தம் கணவர்மார்களும்


இருண்ட கூந்தலையும் , வில்லினை ஒத்த புருவத்தையும் , ஒளி பொருந்திய தலை அணிகலங்களால் ஒளி உடைய நெற்றியை உடைய பெண்களும் ,
அறிவோடு கூடின புகழை அணிகலனாக அணிந்தோரும் ,
கற்பு முதலிய நலன்களும் கூடி , நாணம் என்பதையே அணிகலனாக அணிந்தோரும் ,
ஆனேற்றின் நடையோடு மாறுபட்ட நடையை உடையோரும் ..மடப்பமுடைய ஒழுக்கத்தினையும் , நாணத்தினையும் இழந்த பரத்தையரும் , கடலின் கண் நுரையாக வரும் வெள்ளிய நிறத்தைப் போல , கரிய முடியின் இடையிடையே வெள்ளிய நரை இருப்போரும் , ஒளிருகின்ற நிலவைப் போல முழுவதுமே வெண்ணிறமாக நரைத்த முடியை உடையோரும் , கடவுளுக்கு படைப்பதற்காக, அவிப் பொருளை உடையவராய் , குடையை ஏந்தினவராய், நறுமணப் பூ , புகை தரும் அகில் போன்றவற்றை ஏந்தினவராய் , பல மக்களும் , இடை விடாது அக்கடவுளின் அடியை வணங்க ஆங்கு வந்து கொண்டிருந்தனர்.தாம் செய்த நல் வினையின் பயனை அனுபவிக்கும்படியாக , சிறந்த மேல் நிலை எனப்படும் சுவர்க்கம் போன்ற அந்தப் பதியிலே , செல்வன் நகர் எனப்படும் அந்தப் பதியிலே , இருவிதமான் கருமை நிறத்தை உடைய , படம் எடுத்த தலையின்கண் அழகு படுத்தப் பட்ட , மலை போன்ற (ஆதிசேடன் என்னும் ) பாம்பினது திருக்கோவில் உள்ளது.வண்டும் , தும்பியும் யாழிசையுடன் போட்டி போட்டுக் கொண்டு இசை பரப்ப , கரு மேகங்களும் அதிரடியுடன் ஒலிக்க, அதற்குப் போட்டியாய் அருவிகளும் ஒலி எழுப்ப, அந்த இசைப் பின்னணியில் , மை தீட்டிய பெண்களுடன் , மணம் கமழும் மலர் மாலைகளை அணிந்த ஆடவரும் , பாடிக் கொண்டும் , ஆடிக் கொண்டும் இருக்க , பலவகைப் பட்ட விருப்பங்களுடனும் , விரும்பியவற்றைப் பெற்ற மகிழ்ச்சியுடனும் , பலரும் வணங்கும் வண்ணம் ஆங்கே தலை மீது சிறப்பாக அணிவகைகள் செய்தவண்ணமும், பூமகளைத் தன் தலை மீது அணிந்தவருமான நாகர் வீற்றிருக்கும் நகரமாக , அந்த செல்வன் நகர் திகழ்ந்தது .நீல மணி போன்ற நிறத்தினையும் அழகினையும் , கூறாகப் பிரித்து , அழகு படுத்தப பட்ட கூந்தலையும் , தெளிவான ஒலி எழுப்பும் நெகிழ்ந்த சிலம்பினையும், வண்டுகள் மது உண்ணும் மலர் போன்ற அழகிய கண்களையும் , ஒளி பொருந்திய நெற்றியையும் , அழகாலும் , நடையாலும் மயில் போலவும் , அவற்றினின்று மாறுபட்டும் விளங்கும் பெண்கள் , மத யானை நடை உடைய தங்கள் கணவன்மாரோடு , இணைந்து , அழகுபட வந்து , தங்கள் துன்பமும் , பிணியும் தீர்ந்து , நல்லவற்றை எல்லாம் தரவல்ல , தொன்று தொட்டு புகழ் உடைய மலையின் அடிவாரத்தில் , கல் சேர்ந்து கிடக்கும் குள வாய் என்னும் நகரில் அமர்ந்த அந்த இறைவனைத் தேடி வருவார் .ஒளி திகழும் பாற்கடலைக் கடைந்த பொழுது , ஆங்கே மேருமலையானது விளக்கமுற நிற்கும் வண்ணம் அதனைத் தன் முதுகின் மேல் வாங்கி (ஆமை உருவில் திருமால் ) மகர மீன்கள் விளையாடும் கடலில் நிறுத்தியபோது , புகழ் மிக்க தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடையும் வண்ணம் அந்த மேரு மலையின் இரு பக்கமும் நாணாக ஆதி சேடன் ஆன போது, மீதி இரு பக்கமும் இருந்த நாண் கயிற்றை , ஆழியானான திருமால் பிடித்து இழுக்க , இப்படிப்பட்ட கடைதலில் , ஒரு தோழம் என்று சொல்லப் படுகிற நீண்ட ஊழிக் காலம் வரையிலும் , சிறிதும் சோராது நீர் (ஆதிசேஷன்) இருந்தீர்


அவ்வாறு கடைந்த பொழுது , வலிய காற்று வீசி மேரு மலையைத் தாக்க வரவே, இந்த ஆதி சேஷனே அதைத் தடுத்து, அந்தக் காற்று, மலையின் கண் புகாதவாறு , தானே அம்மலையைச் சுற்றி அரவணைத்துக் கொண்டார் .


மணியை ஒத்த நிறத்தை உடைய மாபெரும் மலைகளை உடைய இந்த உலகை , ஒரு அணிகலன் போல எளிதாகத் தாங்கியவரும் நீர் தான்


தன்னை மற்றவர்கள் பணியத் தக்க, தான் மற்றவர்களுக்கு பணிய வேண்டாத தகைமையை உடைய , விரைந்து செல்லும் காளை ஊர்தியை உடைய சிவ பெருமான், திரிபுரம் எரித்த போது, இமயமே வில்லாக இருக்க , அந்த வில்லுக்கு நாணாக அதிசேஷனே, நீர் இருந்து தொல் புகழ் தந்தீர்.


அச்சத்தைத் தரும் ஆயிரம் அரிய தலைகளைப் பரப்பி , தன் சுற்றம் எனும் கணங்களுடன் இருக்கும் அண்ணலான ஆதிசேடனை வணங்கி , திருமாலே , நின் நல்லடி பணிகிறோம் . ஏனெனில் , நாங்கள் எல்லோரும் , நின்னடியைப் பிரியாமல் இருப்பதற்கே


No comments: